×

தென் ஆப்ரிக்கா அணி அறிவிப்பு

ஜோகன்னஸ்பர்க்: இந்தியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான தென் ஆப்ரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தெம்பா பவுமா தலைமையில் மொத்தம் 15 பேர் அடங்கிய அணியை தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. இவர்களில் பவுமா உள்பட 8 வீரர்கள் முதல் முறையாக உலக கோப்பையில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. காயம் காரணமாக ஓய்வெடுத்து வந்த கேஷவ் மகராஜுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தொடக்க வீரர்/விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக், உலக கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

* தென் ஆப்ரிக்கா: தெம்பா பவுமா (கேப்டன்), ஜெரால்ட் கோயட்ஸீ, குயின்டன் டி காக், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சென், ஹெய்ன்ரிச் கிளாசன், சிசந்தா மகாளா, கேஷவ் மகராஜ், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி என்ஜிடி, அன்ரிச் நோர்க்யா, காகிசோ ரபாடா, டாப்ரைஸ் ஷம்சி, ராஸி வாண்டர் டுஸன்.

The post தென் ஆப்ரிக்கா அணி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : South Africa ,Johannesburg ,South African ,World Cup ODI ,India ,Themba Bouma… ,Dinakaran ,
× RELATED சில்லி பாயின்ட்…