
சென்னை: சர்வதேச ஐடிஎப் மூத்தோர் டென்னிஸ் போட்டி செப்.11ம் தேதி முதல் செப்.16ம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. சென்னை பிரசிடென்சி கிளப் சார்பில் நடைபெறும் இந்தப் போட்டியில் 35, 45, 55வயதுக்கு மேற்பட்டவர்ளுக்கு 3 பிரிவுகளாக ஒற்றையர், இரட்டையர் ஆட்டங்கள் நடைபெறும். ஐடிஎப் மூத்தோர் டென்னிஸ் போட்டியில் முதல்முறையாக மகளிர் பிரிவு ஆட்டங்களும் நடைபெற உள்ளன. சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 150 வீரர், வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ளனர். முன்னதாக செப்.8ம் தேதி முதல் தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடக்கும். போட்டிகள் எழும்பூர் பிரசிடென்சி கிளப், நுங்கம்பாக்கம் டென்னிஸ் வளாகங்களில் நடைபெறும். வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தம் ரூ.2.10 லட்சம் ரொக்கப் பரிசாக வழங்கப்படும். இந்தப் போட்டியை சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு (ஐடிஎப்), இந்திய டென்னிஸ் சங்கம், தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் இணைந்து நடத்துகின்றன. இத்தகவலை நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது போட்டியின் தலைவர் ஷிவராம் செல்வகுமார் தெரிவித்தார்.
The post சர்வதேச மூத்தோர் டென்னிஸ் சென்னையில் செப்.11ல் தொடக்கம் appeared first on Dinakaran.