×

தளபதி கே.விநாயகம் கல்லூரியில் பேராசிரியர்களுக்கு பரிசு

திருத்தணி: தளபதி கே. விநாயகம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியல் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, மேதினாபுரம் பகுதியில் இயங்கி வரும் திருத்தணி தளபதி கே.விநாயகம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா நேற்று நடந்தது. இதில், தளபதி கே.விநாயகம் கல்விக் குழுத்தின் தாளாளர் எஸ்.பாலாஜி பங்கேற்று ஆசிரியர் தினவிழாவை துவக்கி வைத்தார். பின், கல்லுாரியில் பணியாற்றி வரும் பேராசிரியர்களுக்கு ஆசிரியர் தினத்தையொட்டி தாளாளர் எஸ்.பாலாஜி பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் வேதநாயகி, துணை முதல்வர் பொற்செல்வி மற்றும் கல்வி குழுமத்தின் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். இதற்கு முன்னதாக அனைத்து பேராசிரியர்களுக்கும் இடையே பல்வேறு போட்டிகள் நடத்தி முதல் மூன்று இடங்களை பிடித்த பேராசியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த விழாவின் நிறைவாக அனைத்து பேராசிரியர் பெருமக்களுக்கும் கல்லூரி தாளாளர் எஸ்.பாலாஜிக்கு நினைவுப்பரிசு வழங்கினர்.

The post தளபதி கே.விநாயகம் கல்லூரியில் பேராசிரியர்களுக்கு பரிசு appeared first on Dinakaran.

Tags : Thalapathy K. Vinayagam College ,Thalapathy K. ,Vinayagam ,Women Arts and Science College Teacher's Day ,Chennai- ,Tirupati ,Thalapathy K. Vinayak College ,
× RELATED முன்னாள் ஊராட்சி தலைவர் மீது நகை மோசடி...