×

வாலிபரை வெட்டிய 3 பேர் கைது

பெரம்பூர்: கொடுங்கையூர் சுகந்தம்பாள் நகரை சேர்ந்தவர் விஜய் (20). இவர் நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் கொடுங்கையூர் கடும்பாடி அம்மன் கோயில் அருகே பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர், விஜய்யை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதுதொடர்பாக கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில், கடந்த ஜூன் மாதம் கொடுங்கையூர் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் நடனமாடும் போது ஏற்பட்ட பிரச்னையில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதும், அப்போது விஜய்யை 5 பேர் தாக்கியுள்ளனர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த முன்விரோதத்தில் மீண்டும் விஜய்யை அதே நபர்கள் வெட்டியதும் தெரிய வந்தது. இதையடுத்து கொடுங்கையூர் ஆர்.வி.நகரை சேர்ந்த கீதா பிரியன் (22) அவரது அண்ணன் கேசவ பிரியன் (24), சோழவரத்தை சேர்ந்த சிவா என்கின்ற வெங்கடேசன் (27) ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

The post வாலிபரை வெட்டிய 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Perambur ,Vijay ,Sukandhampal ,Kodunkaiyur ,Kodungaiyur ,Katumpadi ,Amman ,
× RELATED எல்லாமே கவிதை மாதிரி இருந்துச்சி - Vijay Antony Speech at Mazhai Pidikatha Manithan Teaser launch