
சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை அரசு அருங்காட்சியகத்தில் சென்னை மாநகரில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஓவியப்போட்டி நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: கலைஞர் நூற்றாண்டு விழாவினை நினைவுகூரும் பொருட்டு, சென்னை மாநகரில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சென்னை அரசு அருங்காட்சியகத்தில் ஓவியப்போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு பிரிவிற்கும் ஓவியத்தில் திறன் பெற்றுள்ள ஒரு மாணவனை அனுப்பி வைக்க வேண்டும்.
இதில் பங்கு கொள்ளும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் சிறந்த ஓவியத்திற்கு பரிசுகள் வழங்கப்படும். சிறந்த ஓவியங்கள் அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்கு கண்காட்சியாக வைக்கப்பட உள்ளது. இதற்கு வரும் 8ம் தேதி மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஓவியப் போட்டி வரும் 9ம் தேதி காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை அருங்காட்சியக வளாகத்தில் நடத்தப்பட உள்ளது. ஓவியப்போட்டி தலைப்புகள் 4, 5, 6 இயற்கை காட்சிகளுடன் தமிழக நினைவுச் சின்னம் அருங்காட்சியக அரும் பொருட்கள் ஏதாவது ஒன்றின் ஓவியம், 7, 8, 9 நான் விரும்பும் தமிழக பெண் சுதந்திரப் போராட்ட வீரர் (அ) திருக்குறளுடன் அதற்கு உண்டான பொருளுடன் ஓவியம் (குரள் ஓவியம்), 10, 11, 12 தமிழ்நாட்டு பண்பாட்டுடன் அருங்காட்சியக தொடர்பு குரல் ஓவியம் (அ) திருக்குறளுடன் அதற்கு உண்டான பொருளுடன் ஓவியம் (குரள் ஓவியம்).
ஓவியம் வரைவதற்கான ஓவியத்தாள் அருங்காட்சியகத்தில் வழங்கப்படும், ஓவியம் வரைவதற்கான பென்சில்கள், வண்ணங்கள் மற்றும் இதர பொருட்களை மாணவர்களே கொண்டு வர வேண்டும், மாணவர்கள் தண்ணீர் பாட்டில்கள் வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் வயதிற்கான அடையாள அட்டை உடன் வைத்திருக்க வேண்டும். ஓவியம் வரையும் போது செல்போன் பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது. முதலில் பதிவு செய்யும் நூறு மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். (தொடர்புக்கு- 04428193238, 9443526604, 9489228435). (Email- govtmuse@tn.gov.in) இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மாணவர்களுக்கு ஓவிய போட்டி: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.