சென்னை: காவல் துறையினரின் விளையாட்டு திறன்களை மேம்படுத்தும் வகையில், சென்னை எழும்பூரில் உள்ள புதுப்பேட்டை ராஜரத்தினம் மைதானத்தில் புதிதாக கட்டப்பட்ட குத்துச்சண்டை மேடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வைப்பறையை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் திறந்து வைத்தார். மேலும், தடகளம், ஹாக்கி, கைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகளுக்கான உபகரணங்களையும் அவர் வழங்கினார். மேலும், இந்த திட்டத்திற்கான செலவு அரசு நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூ.11 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில், சென்னை காவல் இணை ஆணையர் (தலைமையிடம்) கயல்விழி, துணை ஆணையர்கள் ராதாகிருஷ்ணன் (தலைமையிடம்) ராதாகிருஷ்ணன் (ஆயுதப்படை), கோபால் (மோட்டார் வாகனப்பிரிவு) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் காவலர்களுக்கான குத்துச்சண்டை மைதானம்: கமிஷனர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.