×

ரூ.50 லட்சம் லஞ்சம்: கெயில் நிர்வாக இயக்குநர் கைது

புதுடெல்லி: ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் கெயில் செயல் இயக்குநர் உள்பட 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. ஸ்ரீகாகுளம் முதல் அங்குல் வரையிலும், விஜய்பூர் முதல் அவுரையா வரையிலுமான எரிவாயு குழாய்களை பதிப்பதற்காக சில ஒப்பந்ததார்களுக்கு சாதகமாக லஞ்சம் பெறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு தொடர்பாக டெல்லி, நொய்டா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் கெயில் நிறுவன செயல் இயக்குநர்(திட்டங்கள்) கே.பி.சிங், வதோதராவை சேர்ந்த அட்வான்ஸ் இன்ஃப்ராஸ்டரக்சர்ஸ் நிறுவன இயக்குநர் சுரேந்தர் குமார் உள்பட 4 பேரை சிபிஐ கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

The post ரூ.50 லட்சம் லஞ்சம்: கெயில் நிர்வாக இயக்குநர் கைது appeared first on Dinakaran.

Tags : GAIL ,New Delhi ,CBI ,Executive Director ,Managing Director ,Dinakaran ,
× RELATED நாட்டுக்கு எதிரான குற்ற செயல்களில்...