×

வ.உ.சி.யின் தியாகத்தையும், பெரும் புலமையையும் இந்தியா மொத்தமும் அறிய செய்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: வஉசியின் தியாகத்தையும், பெரும்புலமையையும் இந்தியா மொத்தமும் அறியச் செய்வோம் என வஉசியின் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: ஆங்கிலேயருக்குச் சவால் விடும் வகையில் கப்பல் விட்டதும், விடுதலைப் போரில் ஈடுபட்டுச் சிறையில் செக்கிழுத்ததும் வ.உ.சிதம்பரனாரின் உணர்ச்சிமிகு வரலாறு. இந்த இணையற்ற தியாகங்களோடு – வழக்கறிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், உரையாசிரியராகவும் இருந்தவர் அவர். தொழிற்சங்க முன்னோடியாக விளங்கியவர். தொல்காப்பியம், திருக்குறள் போன்ற பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்த தமிழறிஞர். அத்தகைய பேராளுமையின் அனைத்துப் பரிமாணங்களையும் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில்தான் நமது திராவிட மாடல் ஆட்சியில் ‘வ.உ.சி. பன்னூல் திரட்டு’, ‘வ.உ.சி. திருக்குறள் உரை’ உள்ளிட்ட நூல்களை அவரது 150வது பிறந்தநாள் விழாவையொட்டி வெளியிட்டோம். தொடர்ந்து மேலும் பல முயற்சிகளின் வழியே இந்தியா மொத்தமும் அவர் தியாகத்தையும், பெரும்புலமையையும் அறியச் செய்வோம்.

The post வ.உ.சி.யின் தியாகத்தையும், பெரும் புலமையையும் இந்தியா மொத்தமும் அறிய செய்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : India ,VUC ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,M.K.Stalin ,Vausi ,V.U.C. ,Dinakaran ,
× RELATED 40க்கு 40 வெற்றியை வழங்கிய தமிழக...