×

பேருந்து கண்ணாடியை உடைத்த மாணவர்கள்

பெரம்பூர்: கோயம்பேட்டிலிருந்து எம்கேபி நகர் வரை செல்லும் (தடம் எண் 46 ஜி) மாநகர பேருந்து நேற்று முன்தினம் காலை வியாசர்பாடி ஸ்டீபன்சன் ரோடு பேருந்து நிறுத்தம் அருகே சென்றது. அப்போது, கல்லூரி மாணவர்கள் சிலர் நடுரோட்டில் நின்று பேருந்தை நிறுத்தும்படி கை காண்பித்தனர். ஓட்டுநர் பேருந்தை சற்று தள்ளி தூரத்தில் சென்று நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கற்களால் பேருந்தின் பின்பக்க கண்ணாடிகளை அடித்து உடைத்துவிட்டு தப்பி ஓடினர். புகாரின் பேரில் போலீசார் மாணவர்களை தேடி வருகின்றனர்.

The post பேருந்து கண்ணாடியை உடைத்த மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : Perampur ,Coimbet ,MKB Nagar ,
× RELATED நாய்கள் தொல்லை மாநகராட்சியில் புகார்