×

பிரதமரின் Asean மாநாட்டு நிகழ்ச்சிக் குறிப்பில் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என்று பெயர் மாற்றம்

டெல்லி: பிரதமரின் Asean மாநாட்டு நிகழ்ச்சிக் குறிப்பில் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் வரும் 9, 10ம் தேதிகளில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. குடியரசு தலைவர் மாளிகை சார்பில் சிறப்பு விருந்தினர்களுக்கான விருந்து வழங்கப்படுகிறது. இதற்கான அதிகார்பூர்வ அழைப்பிதழ் வெளியாகி உள்ளது. அந்த அழைப்பிதழில் ‘இந்திய குடியரசுத் தலைவர்’ என்று குறிப்பிடப்படுவதற்கு பதிலாக ‘பாரத்தின் குடியரசுத் தலைவர்’ என்று குறிப்பிட்டு அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. அந்த அழைப்பிதழ் இன்று வெளியானதால், இந்தியாவின் பெயரை ‘பாரதம் அல்லது பாரத்’ என்று ஒன்றிய பாஜக அரசு மாற்ற விரும்புகிறதா? என்ற விவாதம் தொடங்கியுள்ளது.

ஆளும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ கூட்டணி என்ற பெயரில் கூட்டணி அமைத்து லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள உள்ளதால், ‘இந்தியா’ என்ற பெயர் பாஜகவுக்கு பெரும் கசப்பாக மாறியுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இவ்வாறாக தற்போது ஜி-20 மாநாட்டு அழைப்பிதழில் ‘பாரத்’ என்று குறிப்பிட்டுள்ளது தேசிய அளவில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது. இதனிடையே தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் மற்றும் இந்தியா மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை இந்தோனேசியா செல்லும் நிலையில், அது தொடர்பான அறிவிப்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரத பிரதமரின் இந்தோனேஷிய பயண நிகழச்சி என நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆசியான் மாநாட்டு நிகழ்ச்சி குறிப்பேட்டில், THE PRIME MINISTER OF BHARAT என குறிப்பிடப்பட்டுள்ளது.

The post பிரதமரின் Asean மாநாட்டு நிகழ்ச்சிக் குறிப்பில் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என்று பெயர் மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Asean ,Bharat ,India ,New Delhi ,Delhi ,Dinakaran ,
× RELATED கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது: பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்