×

மேற்குவங்க அரசு நிதி ஒதுக்காததால் மண்வெட்டி, கூடையுடன் களத்தில் இறங்கிய பாஜக பெண் எம்எல்ஏ: சொந்த பணத்தில் சாலை அமைப்பு


கொல்கத்தா: மேற்குவங்க அரசு நிதி ஒதுக்காததால் மண்வெட்டி, கூடையுடன் களத்தில் இறங்கிய பாஜக பெண் எம்எல்ஏ, தனது சொந்த பணத்தில் சாலைப்பணிகளை மேற்கொண்டார். மேற்குவங்க மாநிலம் சல்டோரா சட்டமன்ற தொகுதியின் பாஜக எம்எல்ஏ சந்தனா பவுரி, தனது கட்டிட தொழிலாளி கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் கிராமத்தில் வசித்து வருகிறார். வறுமையான குடும்ப பின்னணி கொண்ட சந்தனா பவுரி, அவ்வப்போது கிராம மக்களுடன் சேர்ந்து வயல்வெளிகளில் வேலை செய்து வருவார். இந்நிலையில் ரங்கமதியிலிருந்து கேலாய் வழியாக ராஜமேலா செல்லும் சாலை நீண்ட நாட்களாக சேதடைந்து உள்ளதால், அதனை பராமரிக்க உள்ளாட்சி நிர்வாகம் நிதி ஒதுக்கவில்லை. அதனால் தனது சம்பளத்தின் ஒருபகுதியை கொண்டு, அந்த சாலையை சீரமைக்கும் பணியில் சந்தனா பவுரி இறங்கியுள்ளார்.

மேலும் கணவர் ஷ்ரவன் உடன் சேர்ந்து மண்ெவட்டி, கூடைகளில் சுமந்து சென்று சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எதிர்க்கட்சி எம்எல்ஏவாக இருப்பதால், எனது தொகுதி மக்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. ஆளும் திரிணாமுல் அரசு தேவையான நிதியை ஒதுக்கி தருவதில்லை. மாநில அரசின் கவனத்திற்கு பலமுறை எடுத்து சென்றும் பலன் ஏதும் இல்லை. அதனால் எனது சம்பள தொகையில் இருந்து சாலையை சீரமைத்து வருகிறேன்’ என்று கூறினார்.

The post மேற்குவங்க அரசு நிதி ஒதுக்காததால் மண்வெட்டி, கூடையுடன் களத்தில் இறங்கிய பாஜக பெண் எம்எல்ஏ: சொந்த பணத்தில் சாலை அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Kolkata ,MLA ,West Government ,Road Organization on Own Money ,
× RELATED கொல்கத்தாவில் 21 மணி நேரம் விமான சேவை ரத்து