×

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் அவசர ஆலோசனை

டெல்லி: டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மக்களவைக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை அமல்படுத்துவதற்கு களத்தில் இறங்கி ஒன்றிய அரசு குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆய்வுக் குழு ஒன்றை அமைத்துள்ளது. இதற்கான சட்ட மசோதா செப்டம்பர் 18ம் தேதி தொடங்க உள்ள சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது அனைத்து அதிகாரங்களையும் மத்தியில் குவிப்பதற்கான முயற்சி என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

இந்நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஒன்றிய அரசின் திட்டத்தை முறியடிப்பதற்கான வியூகங்களை வகுக்க இந்தியா கூட்டணி ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். ஆலோசனையில் டி.ஆர்.பாலு, வைகோ, திருமாவளவன், சுப்ரியா சுலே, டெரிக் ஓ பிரையன், சஞ்சய் ராவத், ராகவ் சதா, கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

The post டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் அவசர ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Allies of India ,Congress ,President ,Mallikarjuna Kharge ,Delhi ,India alliance ,Lok Sabha ,
× RELATED டெல்லி மாநில காங்கிரஸ் கமிட்டி இடைக்கால தலைவராக தேவேந்திர யாதவ் நியமனம்