×

“இந்தியாவை அழிக்கவே முடியாது” – காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ X தளத்தில் பதிவு

“இந்தியாவை அழிக்கவே முடியாது” – காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ X தளத்தில் பதிவுடெல்லி: இந்தியாவை அழிக்கவே முடியாது என காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ X தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் வரும் 9, 10ம் தேதிகளில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. குடியரசு தலைவர் மாளிகை சார்பில் சிறப்பு விருந்தினர்களுக்கான விருந்து வழங்கப்படுகிறது. இதற்கான அதிகார்பூர்வ அழைப்பிதழ் வெளியாகி உள்ளது. அந்த அழைப்பிதழில் ‘இந்திய குடியரசுத் தலைவர்’ என்று குறிப்பிடப்படுவதற்கு பதிலாக ‘பாரத்தின் குடியரசுத் தலைவர்’ என்று குறிப்பிட்டு அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. அந்த அழைப்பிதழ் இன்று வெளியானதால், இந்தியாவின் பெயரை ‘பாரதம் அல்லது பாரத்’ என்று ஒன்றிய பாஜக அரசு மாற்ற விரும்புகிறதா? என்ற விவாதம் தொடங்கியுள்ளது.

வரும் 18ம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், குடியரசு தலைவரின் பெயரில் வந்துள்ள அழைப்பிதழிலில் இந்தியா என்பதற்கு பதிலாக ‘பாரத்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ கூட்டணி என்ற பெயரில் கூட்டணி அமைத்து லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள உள்ளதால், ‘இந்தியா’ என்ற பெயர் பாஜகவுக்கு பெரும் கசப்பாக மாறியுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இவ்வாறாக தற்போது ஜி-20 மாநாட்டு அழைப்பிதழில் ‘பாரத்’ என்று குறிப்பிட்டுள்ளது தேசிய அளவில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி; கட்சியின் அதிகாரப்பூர்வ X தளத்தில் இந்தியாவை அழிக்கவே முடியாது என பதிவிட்டுள்ளது.

The post “இந்தியாவை அழிக்கவே முடியாது” – காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ X தளத்தில் பதிவு appeared first on Dinakaran.

Tags : India ,Congress Party ,Congress ,
× RELATED சட்டீஸ்கரில் நாங்க தான்..இல்ல..இல்ல.....