×

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவை ஒட்டி நாகை மாவட்டத்துக்கு 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை..!!

நாகை: நாகை மாவட்டத்துக்கு 8ம் தேதி உள்ளூர் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவை ஒட்டி நாகை மாவட்டத்துக்கு 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி மாதா பேராலையத்தில் ஆண்டுப் பெருவிழா நடைபெறுவது வழக்கம். ஆகஸ்ட் 29-ம் தேதி தொடங்கிய வேளாங்கண்ணி பேராலய பெருவிழா வரும் 8-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான வேளாங்கண்ணி அன்னையின் பிறந்தநாள் விழா வருகின்ற 8ம் தேதி நடைபெற உள்ளது.

இதனால் நாகை மாவட்டத்திற்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் வரும் 23-ம் தேதி அன்று அலுவலர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு வேலை நாளாக அறிவித்து நாகை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்வில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்காணோர் கலந்துகொண்டனர் என்பது நினைவுகூரத்தக்கது.

The post வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவை ஒட்டி நாகை மாவட்டத்துக்கு 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை..!! appeared first on Dinakaran.

Tags : local ,Nagai district ,Velankanni temple anniversary ,Nagai ,Velankanni temple ,Velankanni temple anniversary festival ,Dinakaran ,
× RELATED வேதாரண்யம் கடல் பகுதிகளில் பலத்த...