×

நாளை மறுநாள் இந்தியா வரும் நிலையில் ஜோ பிடனின் மனைவி ஜில் பிடனுக்கு கொரோனா : பயண திட்டத்தில் மாற்றம் ஏற்படுகிறதா?

வாஷிங்டன்: நாளை மறுநாள் இந்தியா வரும் ஜோ பிடனின் மனைவிக்கு கொரோனா பாசிடிவ் உறுதியானதால், அவர் அதிபருடன் வருவாரா? என்பது கேள்வியாக உள்ளது. டெல்லியில் நடைபெறவுள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் அவரது மனைவி ஜில் பிடன் ஆகியோர் நாளை மறுநாள் (செப். 7) இந்தியா வருவதாக அறிவிக்கப்பட்டது. வரும் 8ம் தேதி பிரதமர் மோடியுடன் அதிபர் ஜோ பிடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது. மேலும் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் அதிபர் ஜோ பிடன், ஜி-20 தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்துவார் என்றும், எரிசக்தி மற்றும் காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய பிரச்னைகள் குறித்து விவாதிப்பார் என்றும் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் நாளை மறுநாள் அமெரிக்க அதிபர் ஜோ பிடனும், அவரது மனைவி ஜில் பிடனும் இந்தியா வரவிருந்த நிலையில், திடீர் மாற்றங்கள் நடந்துள்ளன. அதிபருக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டதில், அதிபருக்கு நெகடிவாகவும், அவரது மனைவிக்கு பாசிடிவ் ரிசல்ட்டும் வந்துள்ளது. இருப்பினும், அவருக்கு கோவிட் அறிகுறிகள் எதுவும் இல்லை என்று கூறப்பட்டது. டெலாவேரில் உள்ள அவரது இல்லத்தில் ஜில் பிடன் தனிமைப்படுத்தலில் இருந்ததாகவும், அதன்பிறகு மருத்துவர்களின் ஆலோசனைபடி அதிபரை சந்தித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. இருந்தும் அதிபர் ஜோ பிடனுடன் ஜில் பிடன் இந்தியா வருவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

The post நாளை மறுநாள் இந்தியா வரும் நிலையில் ஜோ பிடனின் மனைவி ஜில் பிடனுக்கு கொரோனா : பயண திட்டத்தில் மாற்றம் ஏற்படுகிறதா? appeared first on Dinakaran.

Tags : Joe Biden ,Jill Biden ,India ,Corona ,Washington ,
× RELATED இஸ்ரேலை தாக்க வேண்டாம்: ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை