×

உம்மன்சாண்டி இறந்ததால் இடைத்தேர்தல் கேரள புதுப்பள்ளி தொகுதியில் விறுவிறு வாக்குப்பதிவு

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள புதுப்பள்ளி தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. இதையடுத்து காலையிலேயே அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டு வருகின்றனர். கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி கடந்த ஜூலை மாதம் காலமானார். அதைத்தொடர்ந்து காலியான புதுப்பள்ளி தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கூட்டணி சார்பில் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மனும், இடதுசாரி கூட்டணி சார்பில் கடந்த இருமுறை உம்மன் சாண்டியை எதிர்த்து போட்டியிட்ட ஜெய்க் சி. தாமசும் போட்டியிடுகின்றனர்.

அதேபோல் பாஜ கூட்டணி சார்பில் லிஜின் லாலும், ஆம் ஆத்மி வேட்பாளராக லூக் தாமஸ் உள்பட மொத்தம் 7 பேர் களத்தில் உள்ளனர். இந்தநிலையில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்களின் வசதிக்காக மொத்தம் 182 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலையிலேயே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டு வருகின்றனர். வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் வேட்பாளர் சாண்டி உம்மன் புதுப்பள்ளி ஜார்ஜியன் பள்ளியில் தாய் மற்றும் தங்கையுடன் வந்து ஓட்டு போட்டார். இடது சாரி கூட்டணி வேட்பாளர் ஜெய்க் சி. தாமஸ் மணர்க்காடு உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார். இடைத்தேர்தலை முன்னிட்டு புதுப்பள்ளி தொகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வரும் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

 

The post உம்மன்சாண்டி இறந்ததால் இடைத்தேர்தல் கேரள புதுப்பள்ளி தொகுதியில் விறுவிறு வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Kerala Pudupalli ,Ummanchandi ,Thiruvananthapuram ,Pudupalli ,Kerala ,Umanchandi ,
× RELATED பெண்ணின் பலாத்கார வீடியோவை...