×

189வது வட்ட திமுக அவைத்தலைவர் கு.வெற்றிவேல் இல்ல திருமண விழா: எம்பி, எம்எல்ஏக்கள் வாழ்த்து

வேளச்சேரி: சென்னை தெற்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் மத்திய பகுதி 189வது வட்டம் (பள்ளிக்கரணை) திமுக அவைத்தலைவரும் முன்னாள் கவுன்சிலரும் சாய் அமுதா ஹார்டுவேர்ஸ் உரிமையாளருமான கு.வெற்றிவேல் -வெ.ராஜசெல்வி தம்பதியின் மகன் வெ.தமிழரசன்-ஆர்.ராஜேஸ்வரி ஆகியோரின் திருமணம் கடந்த 3ம்தேதி காலை கோவிலம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீராணி மஹாலில் நடந்தது. முன்னதாக, 2ம்தேதி மாலை வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, சோழிங்கநல்லூர் எம்எல்ஏவும் சோழிங்கநல்லூர் மத்திய பகுதி திமுக செயலாளருமான எஸ்.அரவிந்த் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதிகள் கே.தேவேந்திரன், பி.கே.தங்கம், பகுதி துணை செயலாளர் வீ. குமரேசன், 189வது வட்ட துணை செயலாளர்கள் சந்திரசேகரன், ஜெகதீசன், ஆனந்தி, பொருளாளர் ஏ.வீரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சென்னை மாநகராட்சி 189வது வார்டு கவுன்சிலரும் வட்ட செயலாளருமான வ.பாபு வரவேற்றார். நிகழ்ச்சியில், தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன், எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, ஏ.எம்.வி.பிரபாகரராஜா, சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார், கவுன்சிலர்கள், மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள், திமுக பிரமுகர்கள், பொதுமக்கள், உறவினர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து கொள்கிறோம் என கு.வெற்றிவேல்-வெ.ராஜசெல்வி தெரிவித்துள்ளனர்.

 

The post 189வது வட்ட திமுக அவைத்தலைவர் கு.வெற்றிவேல் இல்ல திருமண விழா: எம்பி, எம்எல்ஏக்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : 189th ,DMK House ,President ,K.Vetrivel ,Chennai South District, Chozhinganallur Central Area 189th Ward ,Pallikaranai ,DMK ,Sai ,189th Ward ,House ,Ceremony ,
× RELATED ஓய்வு பெற்றவர்களுக்கு ஊதியம் கிடைக்க...