×

நாட்டு அடையாளம் என்பது பாஜகவின் தனிப்பட்ட சொத்து அல்ல; பாஜக விருப்பம் போல நாட்டின் பெயரை மாற்ற முடியாது: ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ராகல் சதா எதிர்ப்பு

டெல்லி: நாட்டின் பெயரை இந்தியா என்று அழைக்கும் வழக்கத்தை பாஜக ஆட்சி மாற்றுவதற்கு ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ராகல் சதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஜி20 அமைப்பு தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் அனுப்பியுள்ள அழைப்பிதழில் பாரத ஜனாதிபதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய ஜனாதிபதி என்பதற்கு பதில் பாரத ஜனாதிபதி என்று குறிப்பிட்டிருப்பது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா என்ற பெயரை பாரதிய ஜனதா அரசு எப்படி நீக்கலாம் என்று ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சதா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமானதல்ல நாடு; 135 கோடி இந்தியர்களுக்குச் சொந்தமானது இந்திய நாடு. நாட்டு அடையாளம் என்பது பாஜகவின் தனிப்பட்ட சொத்து அல்ல; பாஜக விருப்பம் போல நாட்டின் பெயரை மாற்ற முடியாது எனவும் ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ராகல் சதா கூறியுள்ளார். இதேபோல் இந்தியா கூட்டணியின் பெயரை பாரத் கூட்டணி என்று மாற்றினால் பாரத் என்ற பெயரையும் பாஜக மாற்றுமா? என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். 140 கோடி மக்களுக்குச் சொந்தமானது இந்த நாடு என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார்.

The post நாட்டு அடையாளம் என்பது பாஜகவின் தனிப்பட்ட சொத்து அல்ல; பாஜக விருப்பம் போல நாட்டின் பெயரை மாற்ற முடியாது: ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ராகல் சதா எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,Aam Aadmi Party ,Ragal Sada ,Delhi ,BJP government ,India ,Ragal ,
× RELATED “சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services)...