×

வரத்து அதிகரிப்பு..விலை சரிவு: பழனியில் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் குப்பையில் கொட்டிய விவசாயிகள்..!!

திண்டுக்கல்: பழனியில் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் விளைவித்த தக்காளியை விவசாயிகள் குப்பையில் கொட்டினர். பழனியில் தக்காளி விளைச்சல் அதிகரித்ததன் காரணமாக பழனியில் செயல்படக்கூடிய தக்காளி மார்க்கெட்டிற்கு விவசாயிகள் அதிகளவு தக்காளியை கொண்டு வந்தனர். பழனியை பொறுத்தவரையில் நெய்காரப்பட்டி, தொப்பம்பட்டி, வாடிப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயிகள் தக்காளியை பயிரிட்டு வருகின்றனர். பொதுவாக ஆவணி மாதத்தில் விளைச்சல் அதிகமாக உள்ளது.

இந்த பகுதியில் விளைவிக்கக்கூடிய தக்காளிகள் அனைத்தும் பழனி நகராட்சி சார்பில் செயல்படக்கூடிய தக்காளி மார்க்கெட்டிற்கு விவசாயிகள் கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர். இன்றைய தினம் அதிகளவு தக்காளி வரத்து இருந்ததன் காரணமாக 14 கிலோ அடங்கிய தக்காளி பெட்டி, வெறும் 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரையிலேயே விற்பனையானது. வரத்து அதிகரித்ததை தொடர்ந்து தக்காளி விலை கடுமையாக சரிந்து கிலோ ரூ.7-க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். கடந்த மாதம் ரூ.200 வரை விலை உயர்ந்து விற்ற தக்காளி விலை போகாமல் குப்பைகளில் கொட்டப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

The post வரத்து அதிகரிப்பு..விலை சரிவு: பழனியில் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் குப்பையில் கொட்டிய விவசாயிகள்..!! appeared first on Dinakaran.

Tags : Palani ,padani ,Dinakaran ,
× RELATED பழநி நகர் பகுதியில் சாலையோரம்...