×

இந்திய-மியான்மர் எல்லையில் மனித முடி கடத்தல் உச்சம்: மியான்மர் வழியாக சீனாவுக்கு சட்ட விரோதமாக கடத்தல்

மியான்மர்: இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக மனித முடி கடத்தப்பட்ட வழக்கில் 18 பேர் மீது அமலாக்கதுறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்தியாவிலிருந்து மியான்மர் வழியாக சீனாவுக்கு சட்ட விரோதமாக பெருமளவில் மனித முடிகள் கடத்தப்படுவதை கடந்த ஆண்டு அமலாக்கத்துறை இயக்குனரகம் கண்டுபிடித்தது.

ஐதராபாத் முதல் மிசோரம் வரை கடத்தல் வலையமைப்பு பரவியுள்ளதாக கூறி இந்த வழக்கில் நாடு முழுவதும் சோதனை நடத்திய அமலாக்கத்துறை பணமோசடி தடுப்பு சட்டம் 2002ன் கீழ் 139 வங்கி கணக்குகளை முடக்கியதுடன் 1.2கோடி ரூபாய் ரொக்க பணத்தையும் கைப்பற்றியது. ஆன்லைன் சீன பந்தயம் மொபைல் பயன்பாடுகள் மூலம் உள்ளூர் முடி வியாபாரிகளுக்கு ரூ.16 கோடி அவலா பணம் விநியோகம் செய்யப்பட்டது.

விசாரணையில் தெரியவந்துள்ளது. மிசோரம் மாநிலத்தை சேர்ந்த லூகாஸ் தங்மாலிங்யானா என்பவர் இதற்கு மூளையாக செயல்பட்டு வந்ததும் கண்டறியப்பட்டது. உள்நாட்டில் பல கைகளுக்கு மாறிய தலைமுடி இறுதியில் மியான்மர் வழியாக சீனாவுக்கு கடத்தப்பட்டதையும் பெருமளவு பணம் மிசோராமில் உள்ள போலி வங்கி கணக்குகளில் சீன சூதாட்ட செயலிகள் மூலம் டெபாசிட் செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் தலைமுடி கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 18பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. லூகாஸ் தங்மாலிங்யானா உள்ளிட்ட மிசோரம் எல்லை நகரமான சம்பாயை சேர்ந்த 8 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றவர்கள் சீனா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

The post இந்திய-மியான்மர் எல்லையில் மனித முடி கடத்தல் உச்சம்: மியான்மர் வழியாக சீனாவுக்கு சட்ட விரோதமாக கடத்தல் appeared first on Dinakaran.

Tags : Indo-Myanmar border ,Myanmar ,China ,Enforcement Department ,India.… ,India-Myanmar ,Dinakaran ,
× RELATED சீனாவில் மலைப்பாதை சாலை சரிந்து...