×

பல்லடம் அருகே 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைப்பு

திருப்பூர்: பல்லடம் அருகே 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர். உடல்களை பெற மறுப்பு தெரிவித்து உறவினர்கள் நேற்று மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டிருந்தனர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என போலீசார் அளித்த உறுதியை ஏற்று உடல்களை பெற உறவினர்கள் ஒப்புதல் அளித்தனர். உடல்கள் பல்லடம் அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது.

The post பல்லடம் அருகே 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Palladam ,Tiruppur ,Dinakaran ,
× RELATED பூத்துக்குலுங்கிய பிரம்மகமலம் பூக்கள்