×

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ..!!

டெல்லி: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ரோகித் ஷர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. அக்டோபர் 5ம் தேதி நடைபெற உள்ள தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் அகமதாபாத்தில் மோத உள்ளன.

இந்நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. பும்ரா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், கே.எல்.ராகுல், அக்சர் படேல் உள்ளிட்டோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். விராட் கோலி, சுப்மன் கில், ஸ்ரேயாஸ், ஹர்திக் பாண்டியா ஆகியோரும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், முகமது சமி, சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியோரும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது.

The post உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ..!! appeared first on Dinakaran.

Tags : BCCI ,World Cup Cricket ,Delhi ,World Cup ,Rochith Sharma ,Dinakaran ,
× RELATED உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்...