×

பொலிவியாவின் அடர் வனத்தில் கோகைன் ஆய்வகம் கண்டுபிடிப்பு; பல லட்சம் ரூபாய் போதைப் பொருட்களை தீக்கிரையாக்கிய அதிகாரிகள்..!!

பொலிவியா: பொலிவியா நாட்டில் அடர் வனத்தில் கோகைன் தயாரிக்கும் ஆய்வகத்தை அந்த நாட்டு அதிகாரிகள் கண்டுபிடித்து தீயிட்டு அழித்தனர். பொலிவியாவின் சாண்டாகுரோஸ் நகரில் உள்ள வனப்பகுதியான லாஸ்மிலோஸ் பகுதிகள் கோகைன் ஹைட்ரோகுளோரைடு போதைப்பொருள் ஆய்வகத்தில் வைத்து தயாரிக்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த அதிகாரிகள், இந்த தகவலை கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி உறுதி செய்தனர். துப்பாக்கியுடன் அங்கு சென்ற அதிகாரிகள், கோகைன் ஹைட்ரோகுளோரைடு தயாரிக்கும் ஆய்வகத்தை தீவைத்து கொளுத்தினர்.

இந்த ஆய்வகத்தில் இருந்த உரிமையாளர்கள் தப்பியோடிவிட்டனர். ஒவ்வொரு மாதமும் இங்கு பல கிலோ கோகைன் ஹைட்ரோகுளோரைடு தயாரிக்கப்பட்டு வந்தது. பிறை ஆற்றின் கரையில் உள்ள வனப்பகுதியில் இத்தனை நாட்களாக இயங்கி வந்த கோகைன் போதைப்பொருள் தயாரிப்பு ஆய்வகத்தை அதிகாரிகள் தற்போது கண்டுபிடித்து அழித்துள்ளனர்.

The post பொலிவியாவின் அடர் வனத்தில் கோகைன் ஆய்வகம் கண்டுபிடிப்பு; பல லட்சம் ரூபாய் போதைப் பொருட்களை தீக்கிரையாக்கிய அதிகாரிகள்..!! appeared first on Dinakaran.

Tags : Bolivia ,
× RELATED வடக்கு பொலிவியாவில் கொட்டித் தீர்த்த...