×

ஸ்பெயினில் பல்வேறு மாகாணங்களில் கொட்டித் தீர்த்த கனமழை: 6 பாலங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு தகவல்

ஸ்பெயின்: ஸ்பெயின் நாட்டின் பல்வேறு மாகாணங்களில் திடீரென கொட்டி தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்கை கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. ஸ்பெயினின் பல மாகாணங்களில் கடந்த 2 நாட்களாக பெய்த கன மழையால் தலைநகர் மேட்ரிட், டோலிடே மாகாணங்களில் பல இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்த நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. டோலிடே மாகாணத்தில் நிறுத்தி வைத்திருந்த 30க்கும் மேற்பட்ட பேருந்துகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. மழையுடன் பலத்த காற்றும் வீசியதால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன.

மறுபுறத்தில் மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. கனமழை தொடரும் என்பதால் பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே அட்லெட்டிகோ, மாட்ரிட் மற்றும் செவில்லா அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

The post ஸ்பெயினில் பல்வேறு மாகாணங்களில் கொட்டித் தீர்த்த கனமழை: 6 பாலங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Spain ,Dinakaran ,
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...