×

தாய், தந்தைக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் வைத்து வணங்கத்தக்கவர்கள் ஆசிரியர்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர் தின வாழ்த்து!!

சென்னை : தாய், தந்தைக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் வைத்து வணங்கத்தக்கவர்கள் ஆசிரியர்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “செப்டம்பர் 5 #TeachersDay!தாய் தந்தைக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் வைத்து வணங்கத்தக்கவர்கள் ஆசிரியப் பெருமக்கள். மாணவச் செல்வங்களை அறிவாற்றல் கொண்டவர்களாய் வளர்த்தெடுத்து வாழ்க்கைப் பயணத்துக்கு வாழ்நாளெல்லாம் வழிகாட்டும் கலங்கரை விளக்கே கல்வித்துறை ஆசிரியர்கள். கல்வியுடன் இணைந்து உயரிய பண்பாட்டையும் அறநெறிகளையும் ஒழுக்கத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் மாணவ சமுதாயத்துக்குக் கற்றுத்தரும் அறிவுப் பெற்றோராக ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.தன்னை உருக்கி அறிவூட்டும் ஆசிரியப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!,” எனத் தெரிவித்துள்ளார்.

The post தாய், தந்தைக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் வைத்து வணங்கத்தக்கவர்கள் ஆசிரியர்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர் தின வாழ்த்து!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,BCE ,G.K. ,Stalin ,Teacher Day ,Chennai ,G.K. Stalin Teacher's Day ,B.C. ,Happy Stalin Teacher Day! ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…