×

அசத்தும் ஆதித்யா எல்-1.. 2வது புவி சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக உயர்த்திய இஸ்ரோ!

சென்னை:ஆதித்யா எல்-1 விண்கலம் 2வது புவி சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.சூரியனைக் கண்காணிக்கவும் வெப்பம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை காலை 11.50 மணிக்கு ஆதித்யா எல்-1 விண்கலம் பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட 63வது நிமிடத்தில் ஆதித்யா விண்கலம் ராக்கெட்டின் கடைசி பாகத்தில் இருந்து பிரிந்து புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து 4 மாதங்கள் லிக்விட் அப்போஜி மோட்டார் மூலம் பயணித்து பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லெக்ராஞ்சியன் பாயிண்ட்டை மையமாக கொண்டு ஒளிவட்ட பாதைக்கு சென்றடையும். லெக்ராஞ்சியன் பாயிண்ட் என்ற இடத்தை மையமாக கொண்டு ஹெலோ ஆர்பிட் எனப்படும் ஒளிவட்ட பாதையில் பயணித்து ஆதித்யா விண்கலம் ஆய்வுகளை மேற்கொள்ளும்.

இதனிடையே விண்கலத்தின் புவி சுற்றுவட்டப்பாதை படிப்படியாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 3ம் தேதி ஆதித்யா எல்-1 விண்கலத்தின் முதல் புவி சுற்றுவட்டபாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது.இந்த நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 2-வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 282 கி.மீ x 40,225 கி.மீ சுற்றுவட்டப்பாதையில் தற்போது ஆதித்யா விண்கலம் சுற்றி வருகிறது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்கலத்தை அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை செப்.10-ந் தேதி மேற்கொள்ளப்படும் என்றும் ஆதித்யா எல்-1 விண்கலம் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.இந்த விண்கலம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி அதன் இலக்கை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அசத்தும் ஆதித்யா எல்-1.. 2வது புவி சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக உயர்த்திய இஸ்ரோ! appeared first on Dinakaran.

Tags : isro ,Chennai ,
× RELATED நிலவுக்கு மனிதனை அனுப்பும்...