×

சிவகாசி மாநகராட்சி சார்பில் வர்த்தக சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை

சிவகாசி, செப்.5: சிவகாசி மாநகராட்சியில் வர்த்தக சங்க நிர்வாகிகளுடன் மாநகராட்சி மேயர் நேற்று ஆலோசனை நடத்தினார்.சிவகாசி மாநகராட்சிக்கு சிவகாசி பஸ் ஸ்டாண்ட் அருகே பிள்ளைக்குழியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகின்றது. இதில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகமும் கட்ட அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதில் 103 வணிக கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. வணிக வளாக கட்டிடம் டெபாசிட் மற்றும் வாடகை நிர்ணயம் செய்வது குறித்து சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் சங்கீதாஇன்பம் தலைமையில் நேற்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், ஆணையாளர் சங்கரன், மாநகராட்சி மண்டலகுழுத்தலைவர்கள் குருசாமி, சூரியா, சேவுகன், மாநகராட்சி கவுன்சிலர் சுதாகரன், மாநகராட்சி சுகாதார அலுவலர் அபுபக்கர் சித்திக், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ரமேஷ் மற்றும் சிவகாசி, திருத்தங்கல் வர்த்தக சங்க நிர்வாகிகள், வியாபாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வணிக வளாக கட்டிடம் டெபாசிட் தொகை மற்றும் வாடகை தொகை குறைந்த அளவில் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தினர்.

The post சிவகாசி மாநகராட்சி சார்பில் வர்த்தக சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Sivakasi Corporation ,Sivakasi ,Sivakasi Bus ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி