×

ஜெயங்கொண்டம் அருகே மூதாட்டிக்கு அரிவாள் வெட்டு

ஜெயங்கொண்டம்,செப்.5: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தில் மருதமுத்து மனைவி சின்னம்மா இறந்த பால்தெளி காரியம் நேற்று நடைபெற்றது. அதே ஊரை சேர்ந்த வெள்ளையன் என்கிற பாலசுப்ரமணியன் (45) என்பவரும், அவரது தாயார் வசந்தாவும் (70) சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த செல்லதுரை மகன் சக்திவேலும் (30) அவரது சகோதரர் முருகானந்தமும் (34) ஆகியோர் சேர்ந்து பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது தாய் வசந்தா ஆகிய இருவரையும் தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். மேலும் வசந்தாவை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த வசந்தா ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து முருகானந்தம் மற்றும் சக்திவேல் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஜெயங்கொண்டம் அருகே மூதாட்டிக்கு அரிவாள் வெட்டு appeared first on Dinakaran.

Tags : Jayangondam ,Jeyangondam ,Maruthamuthu ,Chinnamma ,Ahyalanthondi ,Jayangkondam ,Ariyalur district ,
× RELATED அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை