உடுமலை: உடுமலை அருகே உள்ள தும்பலபட்டி கிராமத்தில் கோயில் திருவிழாவில் தகராறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள் உடுமலை டிஎஸ்பி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தும்பலபட்டி கிராமத்தில் கோயில் திருவிழா கடந்த 2 நாட்களுக்கு முன் நடைபெற்றது. திருவிழாவின்போது மது போதையில் நடைபெற்ற தாக்குதலில் 3 பேர் தாக்கப்பட்டனர். இந்நிலையில் திருவிழாவில் ரகளை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தும்பலபட்டி கிராம மக்கள் நேற்று உடுமலை டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அவர்கள் டிஎஸ்பி அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் கிராம திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் (3ம்தேதி) இரவு கும்மியாட்டம் நடந்தது. அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில் சிலர் மது குடித்துவிட்டு வந்து, சாதி பெயரை கூறி திட்டி தகராறு செய்தனர். பெண்களை கேலி செய்தனர். தட்டிக்கேட்ட 3 பேரை ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பினர். எனவே, தகராறில் ஈடுபட்ட மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கிராம மக்களிடம் கூறியதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
The post திருவிழாவில் தகராறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

