
- மெலனமஞ்சுறிச்சி
- பிரகாசிக்கும் பள்ளி
- முத்துபேட்டை
- மேலனம்மங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி
- முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை, செப். 5: முத்துப்பேட்டையை அடுத்த மேலநம்மங்குறிச்சி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்வித்துறை சார்பில் கொண்டுவரப்பட்ட ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டம் குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தலைமையாசிரியர் மகாதேவன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாணவர்கள், ‘‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி. இதில் நான் பெருமை அடைகிறேன். என் பள்ளியை தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்திருப்பது எனது கடமையும் பொறுப்பும் என்பதை உணர்ந்து செயல்படுவேன். பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் குப்பையை ஏற்படுத்தமாட்டேன். எனது சக தோழர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவேன்.
பள்ளியின் தூய்மை பணிக்கு என்னை மனப்பூர்வமாக அர்பணித்துக் கொள்வேன். ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ முயற்சியில் நான் முழுமனதுடன் பங்கேற்பதுடன் எனது நண்பர்கள், உறவினர்கள், சுற்றத்தார் அனைவரிடமும்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். என்னால் இப்பணிக்காக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் எனது பள்ளியை தூய்மையாக வைத்திட பேருதவி செய்யும் என்பதில் உறுதியாக உள்ளேன். எனது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து நான் பெருமிதம் கொள்கிறேன்’’ என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
The post மேலநம்மங்குறிச்சியில் மாணவர்கள் ‘மிளிரும் பள்ளி’ உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.