×

நொய்யல் ஆற்றில் 1600 டிடிஎஸ் உடன் செல்லும் தண்ணீர்

காங்கயம், செப்.5: நொய்யல் ஆற்றில் தண்ணீரில் டிடிஎஸ் தன்மை அதிகமானதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் உற்பத்தியாகி திருப்பூர்,ஈரோடு,கரூர் மாவட்டங்கள் வழியாக காவிரியுடன் கலக்கும் நொய்யல் ஆறு, கரூர் மாவட்டத்தில் உள்ள ஊட்டுக்கால்வாய் 20 ஆயிரம் ஏக்கர் பாசனம் பயன்பெறும் வகையில் இருந்து வந்துள்ளது. திருப்பூர் சாயக்கழிவுநீர் கலப்பதால் டிடிஎஸ்அளவு அதிகரிக்கத் துவங்கியது. இதனால் சாயக்கழிவு கலந்த தண்ணீரை பயன்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மழை காலங்களில் வரும் வெள்ளநீரை விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக ஆகஸ்ட் மாதத்தில் மழை பெய்து செப்டம்பர் மாதம் டி.டி.எஸ்., 600க்கும் கீழ் இருந்தது.இதையடுத்து விசாயத்திற்காக முத்தூர் தடுப்பணையில் இருந்து குப்பகவுண்டன்வலசு குளத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் போதிய மழை பெய்யாததால் நொய்யல் ஆற்றில் கடந்த 20 நாட்களாக தண்ணீரில் டி.டி.எஸ்., 1500க்கும் அதிகமாகியது.நேற்று மாலை நிலவரப்படி ஒரத்துப்பளையம் அணைக்கு தண்ணீர் வரத்து 77 கன அடியாக இருந்தது. 79 கன அடி வெளியேறியது, தண்ணீரில் டிடிஎஸ் 1600 ஆகவும், நீர்மட்டம் 2.72 அடியாக இருந்நது.

இது பற்றி நொய்யல் பாசன விவசாயிகள் தரப்பில் கூறியதாவது: கடந்த ஆண்டுகளில் மழை பெய்ததால், ஆற்றில் தண்ணீர் செல்வது அதிகரித்தது.இதனால், டிடிஎஸ் குறைந்து விவசாயத்திற்கு பயன்படுத்தும் அளவில் இருந்தது.ஆற்று பகுதியில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீரில் மாற்றம் ஏற்பட்டது. இப்போது லேசான அளவில் தான் மழை பெய்துள்ளது. திருப்பூர் சாய ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

The post நொய்யல் ஆற்றில் 1600 டிடிஎஸ் உடன் செல்லும் தண்ணீர் appeared first on Dinakaran.

Tags : Noyal river ,Kangayam ,Coimbatore ,Velliangiri hill ,Dinakaran ,
× RELATED மாணவி கூட்டு பலாத்காரம் அதிமுக நிர்வாகிக்கு குண்டாஸ்