×

வருவாய்த்துறை அலுவலர் சங்க செயற்குழு கூட்டம்

தஞ்சாவூர், செப்.5: தஞ்சாவூர் மாவட்ட தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்க செயற்குழு கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத்தலைவர் வெங்கடாஜலம் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் அய்யம்பெருமாள், துணைத்தலைவர்கள் லிங்குசாமி, ரமேஷ், துணைச்செயலாளர்கள் முரளிக்குமார், கணேசமூர்த்தி, மாவட்ட மகளிரணி தலைவி கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முருசுக்குமார் வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஆலோசகர் தரும.கருணாநிதி கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட அமைப்பு செயலாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

The post வருவாய்த்துறை அலுவலர் சங்க செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Revenue Officers Association Executive Committee ,Thanjavur ,Thanjavur District ,Tamil State Revenue Officers Association Executive Committee ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் பரவலாக மழை சம்பா பயிர் பாசன தேவை பூர்த்தியாகும்