×

திருமயம் அருகே கோழியை விழுங்கிய 10 அடிநீள ராட்சத மலைப்பாம்பு பிடிபட்டது

திருமயம். செப்.5: திருமயம் அருகே கோழியை விழுங்கிய சுமார் 10 அடி நீளமுள்ள ராட்சத மலை பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ராங்கியம் பொன்னழகி நகர் குடியிருப்பு பகுதியில் நேற்று காலை அப்பகுதி மக்கள் நடந்து சென்றபோது புதர் செடிக்குள் கோழிகத்தும் சத்தம் கேட்டது. இதனை அடுத்து அந்த வழியாக சென்றவர்கள் புதர் அருகில் சென்று பார்த்தபோது மலைப்பாம்பு ஒன்று கோழியை விழுங்கியபடி படுத்திருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் திருமயம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சுமார் 10 அடி நீளம் உள்ள ராட்சத மலை பாம்பை பிடித்தனர். இதனை தொடர்ந்து பிடிபட்ட மலைப்பாம்பை அப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் தீயணைப்பு துறையினர் விட்டு சென்றனர்.

The post திருமயம் அருகே கோழியை விழுங்கிய 10 அடிநீள ராட்சத மலைப்பாம்பு பிடிபட்டது appeared first on Dinakaran.

Tags : Tirumayam ,Thirumayam ,
× RELATED திருமயம் ஊராட்சியில் 11.16 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட பணிகள்