×

அரசு மருத்துவமனை பிணவறையில் போதிய இடவசதி செய்ய பொதுமக்கள் கோரிக்கை

திருப்புவனம், செப்.5: திருப்புவனம் அரசு தாலுகா மருத்துவமனையில் போதிய டாக்டர்கள், நர்சுகள் நியமிக்க வேண்டும். 70 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அத்தியாவசிய வசதிகள் வேண்டும். திருப்புவனம் நான்கு வழிச்சாலையில் உள்ளதால் இப்பகுதியில் அடிக்கடி சாலை விபத்துக்கள் மற்றும் பல்வேறு சம்பவங்களில் ஏற்படும் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. ஒரே நாளில் மூன்று நான்கு பிணங்கள் வந்து விடுகின்றன.

குளிர் சாதனை இல்லை. பிணவறையில் உடல்களை வைக்க முடியவில்லை. பரிசோதனை கூடத்தில் பரிசோதனை மேஜை ஒன்று மட்டுமே உள்ளது. உடல்களை தரையில் தான் வைக்கின்றனர். இதனால் டாகடர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பிரேத பரிசோதனை செய்ய ஊழியர் இல்லை. மானாமதுரை, சிவகங்கை மருத்துவமனையில் இருந்து தான் ஊழியர் வரவேண்டியுள்ளது. பொது சுகாதார ஊழியர்கள் இல்லை என்பதால், கழிப்பறைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இதனால் உள் மற்றும் வெளி நோயாளிகள் சிரமப்படுகின்றனர். திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு தினசரி 500க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், 75க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

The post அரசு மருத்துவமனை பிணவறையில் போதிய இடவசதி செய்ய பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruppuvanam ,Tiruppuvanam Government Taluk Hospital ,Dinakaran ,
× RELATED திருப்புவனம் பேரூராட்சியில் தேர்தலில் 8 ஆயிரம் பேர் வாக்களிக்க வரவில்லை