×

நாகப்பட்டினத்தில் பகுதி நேர சிறப்பாசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்,செப்.5: நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் முன் பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கலியவேல், பொருளாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாட்டில் கடந்த 12 ஆண்டுகளாக 12 ஆயிரத்து 200 உடற்கல்வி, ஓவியம், கணினி உட்பட 8 துறைகளை கொண்ட பகுதிநேர ஆசிரியர்கள் தொகுப்பூதியமாக ரூ.10 ஆயிரம் பெற்று பணியாற்றி வருகின்றனர். இந்த பகுதி நேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

The post நாகப்பட்டினத்தில் பகுதி நேர சிறப்பாசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Nagapattinam Collector ,association ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் எவ்வளவு...