×

கமுதியில் நாய்கள் துரத்தியதால் வேலியில் சிக்கி புள்ளிமான் பலி

கமுதி, செப். 5: கமுதி- குண்டாறு பகுதி முழுவதும் அடர்ந்த கருவேல மரங்களால் சூழப்பட்டுள்ள பகுதி ஆகும். இப்பகுதியில் ஏராளமான புள்ளிமான்கள் மயில்கள் மற்றும் அரிய வகை வெள்ளை மயில்கள் வசித்து வருகின்றன. தற்போது வறண்ட வானிலை நிலவுவதால் தண்ணீர் குடிப்பதற்காக மான்கள் மற்றும் மயில்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து செல்லும். அந்த வகையில் நேற்று கமுதி-குண்டாறு கரை பகுதியில் சந்தன மாரியம்மன் கோயில் அருகே தண்ணீர் குடிக்க வந்த புள்ளிமானை நாய்கள் துரத்தி உள்ளன.

இதில் பதட்டமடைந்த மான் கம்பி வேலிக்குள் சிக்கி உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த கமுதி தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் இறந்த புள்ளி மானை மீட்டெடுத்தனர். பின்னர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பிறகு பேரூராட்சி வாகனம் மூலம் உடற்கூறு ஆய்வுக்கு கோட்டை மேட்டில் உள்ள கால்நடை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post கமுதியில் நாய்கள் துரத்தியதால் வேலியில் சிக்கி புள்ளிமான் பலி appeared first on Dinakaran.

Tags : Kamudi ,Kamudi- Gundaru ,
× RELATED 115 அடி உயரமுள்ள செல்போன் டவரில் ஏறி தொழிலாளி தற்கொலை