
கரூர், செப். 5: கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:முன்னாள் படைவீரர்களின் திறனை ஊக்குவித்து அதற்கு ஏற்ப வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் ஸ்கில் டிரெய்னிங் இலவசமாக நடத்திட அரசு முன்வந்துள்ளது.எனவே, விருப்பம் உள்ள முன்னாள் படைவீரர்கள் திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகி பயிற்சிகள் பற்றிய விபரம் அறிந்து செப்டம்பர் 15ம்தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post முன்னாள் படை வீரர்களுக்கு இலவச ஸ்கில் டிரெய்னிங் appeared first on Dinakaran.