×

தேசிய மக்கள் நீதிமன்றம்

தர்மபுரி, செப்.5: தர்மபுரி முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவருமான மணிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்ட அளவில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக, வரும் 9ம்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. இதையொட்டி, நேற்று (4ம்தேதி) முதல் வரும் 8ம் தேதி வரை (அனைத்து வேலை நாட்களிலும்) சிறப்பு (மக்கள் நீதிமன்றம்) அமர்வு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், அந்தந்த நீதிமன்றங்களிலேயே மதியம் 2 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. சிறப்பு மக்கள் நீதிமன்ற அமர்வை தொடர்ந்து, வரும் 9ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட அளவிலும், தாலுகா நீதிமன்றங்களிலும் (அரூர், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் மற்றும் காரிமங்கலம்) நடைபெறும்.

இந்த லோக் அதாலத்தில், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள சமரசம் செய்து கொள்ள கூடிய மோட்டார் வாகன விபத்து வழக்கு, காசோலை மோசடி வழக்கு, வங்கி வாராக்கடன் வழக்கு, தொழிலாளர் நல வழக்கு மற்றும் சமரச குற்ற வழக்குகளுக்கு, சமரச முறையில் தீர்வு காணப்படவுள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post தேசிய மக்கள் நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : National People's Court ,Dharmapuri ,Principal District Judge ,District Legal Affairs Commission ,Chairman Manimozhi ,Dinakaran ,
× RELATED தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் 8ம் தேதி நடக்கிறது