×

சோப்பு பவுடர் விற்க வந்து கோயிலில் திருட முயன்ற வாலிபர் சிக்கினார்

வடமதுரை, செப். 5: வடமதுரை அருகே உள்ள கொம்பேறிபட்டி ஊராட்சி வெங்கடாசலபுரம் என்ற கிராமத்தின் நடுவில் விநாயகர் கோயில் உள்ளது. இவ்வூரில் நேற்று சோப்பு பவுடர் விற்பது போல் வந்து நோட்டமிட்ட ஒரு வாலிபர் கோயிலின் உள்ளே புகுந்து உண்டியலை திறந்து அதில் உள்ள பணத்தை திருட முயன்றுள்ளார். அப்போது கோயில் வளாகத்தின் முன்புள்ள தெரு குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்த பெண்கள் இதை பார்த்து கூச்சல் போட்டனர்.
இதையடுத்து கிராம மக்கள் அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்ததுடன், இதுகுறித்து வடமதுரை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில், அவர் மதுரை மாவட்டம், திருமங்கலம் ஏழுசாமி கோயில் தெருவை சேர்ந்த செல்லமுத்து (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சோப்பு பவுடர் விற்க வந்து கோயிலில் திருட முயன்ற வாலிபர் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Vadamadurai ,Ganesha ,Venkatasalapuram ,Komberipatti Panchayat.… ,
× RELATED வேடன்சந்தூர் அருகே திருடிய இருசக்கர...