×

கொடைரோடு அருகே விபத்தில் சிக்கியோரை மீட்ட போலீஸ் எஸ்.ஐ: பொதுமக்கள் பாராட்டு

நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய வாகனத்தில் இருந்த காயமடைந்த குழந்தை மற்றும் அதன் தாயாரை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற போலீஸ் எஸ்.ஐயின் நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டினர். திண்டுக்கல் – மதுரை தேசிய நான்கு வழிச்சாலையில் கொடைரோட்டை அடுத்த நாகையகவுண்டன்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியை சேர்ந்த சரவணன் மற்றும் அவரது சகோதரி பாக்கியலட்சுமி, அவரது 3 வயது குழந்தை ஆகியோர் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் கதறி துடித்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த அம்மையநாயக்கனூர் காவல் நிலைய எஸ்.ஐ ஷேக்அப்துல்லா, உடனடியாக படுகாயமடைந்த மூவரையும் மீட்டு, தனது காரில் ஏற்றிச்சென்று அம்மையநாயக்கனூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், அவர்கள் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் நடவடிக்கையை விரைந்து மேற்கொண்ட எஸ்ஐயின் நடவடிக்கையை அனைத்து தரப்பினரும் பாராட்டினர்.

The post கொடைரோடு அருகே விபத்தில் சிக்கியோரை மீட்ட போலீஸ் எஸ்.ஐ: பொதுமக்கள் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Police SI ,Kodairod ,Nilakottai ,
× RELATED கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது