×

சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம் ஆரணி அருகே

ஆரணி, செப்.5: ஆரணி அருகே சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. வேலூர் மாவட்டம், சதுப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் உபையத்துல்லா மகன் மன்சூர்அலி(26). இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பையூர் பகுதியை சேர்ந்த உறவினர் மகள் 17 வயது சிறுமிக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணத்தை ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடத்த இருவீட்டாரும் முடிவு செய்து, நேற்று திருமண நிழ்ச்சியும் நடைபெற்றது. இதுகுறித்து சைல்டு ஹெல்ப் லைன் மூலம் சமூகநலத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அல்லிராணி, ஊர்நல அலுவலர் கீதா, சைல்டு ஹெல்ப் லைன் மேற்பார்வையாளர் பாலாஜி தலைமையிலான போலீசார் சேவூருக்கு சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர். அப்போது சிறுமியின் பெற்றோர்கள், உறவினர்கள் போலீசார் மற்றும் சமூகநலத்துறை அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் அல்லிராணி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி திருமணத்தை நிறுத்தி சிறுமியை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தார். இதையடுத்து, அதிகாரிகள் சிறுமியை திருவண்ணாமலை குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

The post சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம் ஆரணி அருகே appeared first on Dinakaran.

Tags : Arani ,Upayatullah Makan ,Satupperi ,Vellore district ,Dinakaran ,
× RELATED ஆரணி பேரூராட்சி பஜார் பகுதியில்...