×

தியேட்டரில் பொருட்களை சூறையாடி கொலை மிரட்டல்

புதுச்சேரி, செப். 5: புதுச்சேரி திருவள்ளுவர் சாலையில் தியேட்டரில் பொருட்களை சூறையாடி கொலை மிரட்டல் விடுத்ததாக ரவுடி உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். புதுச்சேரி, நீடராஜப்பர் வீதியில் வசிப்பவர் சுரேஷ் (45). இவருக்கு சொந்தமான திருவள்ளுவர் சாலையில் உள்ள தியேட்டருக்கு நேற்று முன்தினம் 2 பேர் படம் பார்க்க வந்துள்ளனர். அப்போது அவர்களை பார்த்த தியேட்டர் ஊழியர்கள், ஏற்கனவே கடந்த வாரம் ஞாயிறன்று கத்தியால் கதவுகளை கிழித்து தெரியவந்ததால், இருவரையும் வழிமறித்து தட்டிக் கேட்டனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதால், தனது நண்பர்களை அழைத்துள்ளனர். உடனே மேலும் இருவர் அங்கு பைக்கில் வந்த நிலையில் 4 பேரும் கும்பலாக சேர்ந்து அங்கிருந்த பாப்கான் தயாரிக்கும் இயந்திரத்தின் கண்ணாடி மற்றும் பில்போடும் மிஷன், விளம்பர பலகையை சூறையாடி விட்டு தப்பிஓடிவிட்டனர்.

இது குறித்து புகாரின்பேரில் உருளையன்பேட்டை போலீசார், அங்கிருந்த சிசிடிவி கேமிராக்களை பார்வையிட்டதில் தியேட்டரில் பொருட்களை சேதப்படுத்தி சூறையாடியது, கொலை மிரட்டல் விடுத்தது ரோடியர்பேட் சதீஷ் (26) மற்றும் விஷ்வா (20) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேர் மீதும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குபதிந்த தேடி வருகின்றனர். ரவுடியான சதீஷ் மீது ஏற்கனவே சாணிக்குமார் கொலை மற்றும் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில் கல்லூரி படிப்பை முடித்த விஷ்வா வேலை தேடி அலைந்தது குறிப்பிடத்தக்கது.

The post தியேட்டரில் பொருட்களை சூறையாடி கொலை மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Thiruvalluvar Road ,
× RELATED குடிநீர் குழாயில் உடைப்பு: புதுச்சேரி...