×

396 ஆசிரியர்களுக்கு இன்று டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் வழங்குகின்றனர்

சென்னை: முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் 396 பேருக்கு சென்னையில் இன்று நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு சென்னை கலைவாணர் அரங்கில் மாலை 5மணிக்கு நடைபெறும் விழாவில் 396 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது.

விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி ஆகியோர் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்க உள்ளனர். டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான இன்று விருது பெறும் ஆசிரியர்களில் ஒரு மாவட்டத்துக்கு குறைந்தபட்சம் 8 பேர் முதல் அதிகபட்சம் 12 ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வாகி உள்ளனர். விருதுடன், ரொக்கம் ரூ.10 ஆயிரம், வெள்ளிப் பதக்கம் 1, பாராட்டு சான்று மற்றும் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது.

The post 396 ஆசிரியர்களுக்கு இன்று டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் வழங்குகின்றனர் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,CHENNAI ,Former ,President ,Dr. ,Radhakrishnan ,Udhayanidhi Stalin ,
× RELATED பாசிச கூட்டத்தின் கூடாரத்தை இழுத்து...