×

மாநகராட்சி இடத்தில் தனியார் அமைத்த மதில்சுவர் அகற்றம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம் 7வது வார்டுக்கு உட்பட்ட பாலகிருஷ்ணா நகர் பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனம் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மதில் சுவரை அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள கார்கில் நகர், ராஜாஜி நகர், ராதாகிருஷ்ணன் நகர் போன்ற பகுதிக்குச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து இந்த இடத்தை மீட்டு அங்கு சாலை அமைக்க வேண்டும் என்று வார்டு கவுன்சிலர் கார்த்திக் மண்டலக்குழு கூட்டத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் ராஜாராம் தலைமையில் கவுன்சிலர் கார்த்திக் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு வந்தனர். அங்கு தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஆக்கிரமிப்பில் இருந்த இடத்தில் சுமார் 750 அடி நீளமுள்ள மதில் சுவரை இடித்து, மாநகராட்சி இடத்தை மீட்டனர். தொடர்ந்து மீட்கப்பட்ட இடத்தில் போக்குவரத்திற்கு எளிதாக இருக்கும் வகையில் உடனடியாக சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மாநகராட்சி இடத்தில் தனியார் அமைத்த மதில்சுவர் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur ,Balakrishna Nagar ,Thiruvottiyur Mandal 7th Ward ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் மழை நீரில்...