×

2014 மே 26 முதல் 9 ஆண்டுகளில் ஒருநாள்கூட மோடி லீவு எடுக்கவில்லை: தகவல் உரிமை சட்டத்தில் பதில்

புதுடெல்லி: ஒரு நாள் கூட பிரதமர் மோடி விடுமுறை எடுக்கவில்லை என பிரதமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது. இந்தியாவின் பிரதமராக 2014ல் மே 26ம் தேதி பதவி ஏற்றார். அதன்பின்னர் இரண்டாம் முறையாக 2019 மே 30ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். இந்தநிலையில், பிரதமராக மோடி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை தருமாறு ஆர்டிஐ பிரபுல் சர்தா என்பவர் கேட்டிருந்த கேள்விக்கு அளித்த பதிலில்,’ஒரு நாள் கூட பிரதமர் மோடி விடுமுறை எடுக்கவில்லை. இந்தியாவின் பிரதமர் ஒருவர் எல்லா நேரத்திலும் பணியில் இருக்கிறார். மேலும் இந்த 9 ஆண்டுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றுள்ளார்’ என்று கூறப்பட்டுள்ளது.

The post 2014 மே 26 முதல் 9 ஆண்டுகளில் ஒருநாள்கூட மோடி லீவு எடுக்கவில்லை: தகவல் உரிமை சட்டத்தில் பதில் appeared first on Dinakaran.

Tags : Modi ,New Delhi ,Prime Minister's Office ,India ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசின் கொள்கைகளால்...