×

நீண்ட நேரம் காக்க வைத்து பார்வையற்ற பெண் பயணியை அலற விட்ட விஸ்தாரா ஏர்லைன்ஸ்

புதுடெல்லி: பார்வையற்ற பெண்பயணியை கொல்கத்தா விமான நிலையத்தில் இறக்கி விடாமல் தாமதித்த விஸ்தாரா நிறுவனத்தின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. டெல்லியில் இருந்து கொல்கத்தா வழியாக போர்ட் பிளேர் செல்லும் விமானத்தில் கடந்த 31ம் தேதி பயணித்த பார்வையற்ற பெண்பயணி கொல்கத்தாவில் இறக்கி விட ப்படாமல் சக்கர நாற்காலிக்காக காத்து கிடந்தார். நீண்ட நேர தாமதத்துக்கு பின், அதுவும் பயணி அறிவுறுத்திய பின்னரே, விமான நிறுவனம் அவரை இறக்கி விடுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

இத்துயரச் சம்பவம் குறித்து அப்பெண் பயணியின் மகன் ஆயுஷ் கெஜ்ரிவால் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “விஸ்தாரா ஏர்லைன்ஸ், பார்வையற்ற எனது அம்மாவை எப்படி இப்படியொரு இக்கட்டான சூழலில் தள்ள முடியும்? உங்கள் மேற்பார்வையிலும் உதவியிலும் விடப்படும் மாற்றுத்திறனாளி பயணிகளை கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு உங்களுடையது இல்லையா? அதிர்ச்சியாக இருக்கிறது,” என்று கூறியுள்ளார். இதற்கு வருத்தம் தெரிவித்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் அதன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பதிவில்,” எங்களுடனான உங்கள் சமீபத்திய அனுபவத்தைப் பற்றி அறிந்து மிகவும் வருந்துகிறோம் , ”என்று தெரிவித்துள்ளது.

The post நீண்ட நேரம் காக்க வைத்து பார்வையற்ற பெண் பயணியை அலற விட்ட விஸ்தாரா ஏர்லைன்ஸ் appeared first on Dinakaran.

Tags : Vistara Airlines ,New Delhi ,Vistara ,Kolkata airport ,
× RELATED பாரீசிலிருந்து வந்த மும்பை...