×

கிரைண்டரில் மாவு அரைத்த போது மின்சாரம் பாய்ந்து பெண் பலி

சென்னை: கிரைண் டரில் மாவு அரைத்த போது மின்சாரம் பாய்ந்து பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கே.ேக.நகர் ராணி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (55). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி வசந்தி (47). தம்பதிக்கு, யுவ (20), விக்னேஷ் (18) என்ற 2 பிள்ளைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை வீட்டில் உள்ள கிரைண்டரில் வசந்தி மாவு அரைத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென கிரைண்டரில் மின் கசிவு ஏற்பட்டது. இதை கவனிக்காத வசந்தி கிரைண்டரில் கையை வைத்த போது, மின்சாரம் பாய்ந்து தூக்கி விசப்பட்டார்.

இதை பார்த்த அவரது மகன் யுவ, தாயை மீட்டு கே.கே.நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு வசந்தியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த கே.கே.நகர் போலீசார், வசந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

The post கிரைண்டரில் மாவு அரைத்த போது மின்சாரம் பாய்ந்து பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Chennai ,KK Nagar Rani ,
× RELATED சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை காரணமாக 27 விமானங்கள் தாமதம்..!!