×

காங்கிரஸ் எஸ்சி துறை தலைவர் வலியுறுத்தல் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சீமானை கைது செய்ய வேண்டும்

சென்னை: பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சீமானை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எஸ்சி துறை தலைவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் எஸ்சி துறை தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான சீமான் தான் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் என்ற போர்வைக்குள் ஒளிந்துகொண்டு தன்னை தற்காத்துக்கொள்ள தொடர்ந்து முயற்சிக்கிறார். ஒரு பெண் தனக்கான நீதி கேட்டு பல வருடங்களாக காவல் நிலையத்தில் புகார் அளித்து தொடர்ந்து போராடிக்கொண்டு இருக்கிறார். சுய ஒழுக்கமும் கட்டுப்பாடும் இல்லாத சீமான் போன்றவர்களை அரசியலில் இருந்தே தமிழக மக்கள் அப்புறப்படுத்த வேண்டும்.

தேர்தலுக்கு தேர்தல் முக்கிய கட்சிகளிடம் இருந்து கையூட்டு பெற்றுக்கொண்டு டம்மி வேட்பாளர்களை தன் கட்சி என்ற அமைப்பின் சார்பில் தேர்தலில் போட்டியிட வைப்பதும் வெளிநாடு வாழ் தமிழர்களின் உணர்ச்சியை தூண்டி வசூல் வேட்டை நடத்தி கொண்டும் தற்போது பாலியல் குற்றச்சாட்டிலும் சிக்கி இருக்கும் சீமான் முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என்று தமிழக காவல் துறைக்கும் சவால் விடுவதுமாக இருக்கிறார். சீமான் மீதான பாலியல் குற்றச்சாட்டை தீர விசாரித்து உண்மை இருக்கும் பட்சத்தில் காலம் தாழ்த்தாமல் அவரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

The post காங்கிரஸ் எஸ்சி துறை தலைவர் வலியுறுத்தல் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சீமானை கைது செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Congress SC department ,Seeman ,CHENNAI ,Dinakaran ,
× RELATED சேரி மொழி என்று சொல்லி பட்டியலின...