
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே முத்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் பெற்றனர். செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் ஸ்ரீ தர்ம சம்வரதனி அம்பிகா ஸ்ரீ முத்தீஸ்வரர் தேவஸ்தானம் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோயிலில், 27ம் தேதி மூலவர் பிரதிஷ்டையும், 1ம் தேதி முதல் கால பூஜையுடன் யாக சாலை ஆரம்பம் மகா தீபாராதனை நடைபெற்றது. 2ம் தேதி இரண்டாம் கால யாக சாலை பூஜை, பூர்ணா ஹூதி மற்றும் மகா தீபாராதனையும், மூன்றாம் கால யாக சாலை பூஜை, பூர்ணா ஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
3ம் தேதி யாக சாலை பூஜைகளுடன் நாடி சந்தானம், மகா தீபாராதனை மற்றும் கடம் புறப்பாடு, மகா கும்பாபிஷேகம் மகா தீபாராதனை, மகா அபிஷேகம் நடைபெற்றது. ஸ்ரீ பொல்லா பிள்ளையார், சகஸ்ர லிங்கம் 63 நாயன்மார்கள் மற்றும் தொகையடியார்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஆத்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்டனர். இறுதியாக சிறப்பு பூஜைகளுடன் 1000 சிவ லிங்கம் தாங்கிய ஒரு திருமேனிக்கு கலச நீர் உற்றபட்டு தீபாராதனை நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து இருந்தனர்.
The post செங்கல்பட்டு அருகே முத்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.