×

ஆசிரியர்கள் தினம்: தலைவர்கள் வாழ்த்து

சென்னை: ஆசிரியர்கள் தினமான நேற்று தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கே.எஸ்.அழகிரி(தமிழக காங்கிரஸ் தலைவர்): ஆசிரியர்களை போற்றுகிற வகையிலும், அவர்களது பங்கை அங்கீகரிக்கும் வகையிலும் செப்டம்பர் 5ம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுவது மிகவும் பொருத்தமானதாகும். எனவே, இந்தியாவின் சிறந்த குடிமக்களை உருவாக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்): சமூகத்தின் ஏணியாக இருந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு காரணமாகத் திகழும் ஆசிரியர்கள் நாளை கொண்டாடும் ஆசிரியர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரின் உயர்வுக்கும் காரணமான ஆசிரியர்கள் எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கும் வகையில் அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டால் தான் அவர்களால் மிகச்சிறந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்க முடியும்.

வைகோ(மதிமுக): நாட்டின் எதிர்கால செல்வங்களான இளம் பிஞ்சுகளை, மழலையர் பள்ளி முதல் உயர் கல்வி வரையில் கல்வி புகட்டி, வாழ்வியல் பண்பாட்டு நெறிகளை ஊட்டி வளர்த்து, தங்களுடைய தன்னலமற்ற பணியால், சேவையால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி புகட்டி வருகின்றனர்.

ஜி.கே.வாசன் (தமாகா): மாணவர்களின் மீது அக்கறையோடு, அர்ப்பணிப்பு உணர்வோடு, அவர்களின் முன்னேற்துக்க அடித்தளம் இடும் கல்வியை மட்டும் போதிக்காமல், அன்பு, கருணை, பொது நலன், தேசப் பற்று, ஒற்றுமை என்று பல்வேறு குண நலன்களை போதிக்கும் ஆசானாக விளங்கும் ஆசிரியர்களை இந்நாளில் போற்றி வணங்குவோம்.

அன்புமணி (பாமக தலைவர்): ஆசிரியர்களால் மாணவ சமுதாயம் முன்னேற வேண்டும் என்ற இலக்கை நோக்கி உழைக்க ஆசிரியர்கள் நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்.

என்.ஆர்.தனபாலன் (பெருந்தலைவர் மக்கள் கட்சி): ஆசிரியர் பணியை அறப்பணியாக ஏற்று சேவை செய்து வரும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாராயணன் (சமத்துவ மக்கள் கழகம்): ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவர் தான் ஆசிரியர். மாணவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, அறிஞராக உயர்த்தும் உன்னத பணி ஆசிரியர் பணி என்பதை யாரும் மறுக்க இயலாது.

The post ஆசிரியர்கள் தினம்: தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Teachers' Day ,CHENNAI ,Tamil Nadu ,KS Alagiri ,Tamil Congress ,President ,
× RELATED புயல் பாதிப்பை சீர் செய்திட நிவாரண...